வறட்சியும் செழிப்பும் சோதனைகளே!
வறட்சியும் செழிப்பும் #சோதனைகளே!
நீர்க்குமிழி போன்ற இந்த குறுகிய வாழ்வை நமக்கு ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான #பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ள #இறைவன் தான் நாடியவாறு இப்பரீட்சையை நடத்துகிறான். இறைவனுக்கு நன்றி செலுத்துவோருக்கு #மறுமையில் #சொர்க்கத்தையும் மறுப்போருக்கு #நரகத்தையும் அவன் வழங்க உள்ளான் என்ற உண்மையை தனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அறிவிக்கவும் செய்துள்ளான்.
இவ்வுலக வாழ்வில் இன்பம் கண்டு மனிதன் மறுமையை மறந்து வாழும்போது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த மறந்து விடுகிறான். அப்போது #இறைவன் மனித வாழ்வின் உண்மை நோக்கமான பரீட்சையை அவனுக்கு நினைவூட்டுவதற்காகவும் அவன் தன்பால் திரும்புவதற்காகவும் தான் தடையின்றி வழங்கிக் கொண்டிருக்கும் அருட்கொடைகளைச் சுருக்கி விடுகிறான்.
சமீபத்திய வறட்சியும் அதைத் தொடர்ந்து பெய்த மழையும் அந்த வகையைச்சார்ந்தவைகளே!
திருக்குர்ஆன் வசனங்கள்:
42:28. அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் அருளைப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
42:29. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் கால்நடைகள் (முதலியவற்றைப்) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் – ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன்.
42:30. அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.