Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
" நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் ....-இயேசு - Thiru Quran Malar

” நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் ….-இயேசு

Share this Article

” நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்” என்று #ஏசுநாதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியது போன்றே ஒவ்வொரு காலத்திலும் வந்த #இறைத்தூதர்கள் அவரவர் காலகட்டத்து மக்களுக்கு கூறியிருந்ததை நாம் காணலாம்.
ஒவ்வொரு இறைத்தூதரும் தத்தமது மக்களிடம் கீழ்கண்டவாறு கூறினார்கள்:

“மக்களே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழுங்கள். நான் இறைவனிடமிருந்து கொண்டுவந்த சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள், அதன் காரணமாக #மறுமையில் மோட்சம் அடைவீர்கள். “
(அந்த கட்டுப்பட்டு வாழ்தலே அரபு மொழியில் #இஸ்லாம் என்று அழைக்கப் படுகிறது).

உதாரணமாக

= #நூஹ் (Noah) கூறினார் :

26:107. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய தூதராவேன்.

26:108. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.

(#அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)

= இறைத்தூதர் #ஹூத் கூறினார்:

26:125. நான் உங்களுடைய நம்பிக்கைக்குரிய தூதரா வேன்.

26:126. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.

= சமூத் கூட்டத்தாரின் பால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் #ஸாலிஹ் கூறினார்:

26:143. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன்.

26:144. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.

= இஸ்ராயீலின் சந்ததியினர்பால் அனுப்பப்பட்ட ஈசா நபியும் – அதாவது ஏசு நாதரும்- இது போன்றே கூறினார்:

61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.

இவ்வுலகுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் -அதாவது ஏசுநாதர் முன்னறிவிப்பு செய்த – முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

7:158. (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை – அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் –

முஹம்மது நபி (ஸல்) அவர்களால் கொண்டு வரப்பட்ட இஸ்லாம் மார்க்கம், அவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்களின் தூதுத்துவத்தையும், அடிப்படை கொள்கைகளையும் உறுதிசெய்கிறது.

“நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்:
“நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே –
இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது –
தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.”
(42:13)

Share this Article

Add a Comment

Your email address will not be published.