Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூன்று! - Thiru Quran Malar

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூன்று!

Share this Article

அங்கத்தூய்மை செய்யும் வரிசைக்கிரமம்:


1. இறை நாமத்தில் தொடங்குதல்

2. மூன்று முறை இரு முன்கைகளையும் கழுவுதல்.

3. மூன்று முறை வாய் கொப்பளித்தல்.

4. இதில் ஒருமுறை மூக்கில் நீரிழுத்து சீற்றுதல்.

5. மூன்று முறை முகம் கழுவுதல்

6. மூன்று முறை முழங்கை வரை இரு கைகளையும் கழுவுதல்.

7. ஈரக்கையால் ஒருமுறை தலை தடவுதல் 

8. அதே ஈரக் கையால் காதுகளை துடைத்தல்

9. மூன்று முறை  கால்களை கணுக்கால் வரைக் கழுவுதல்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூன்று! 

1. தினசரியும் ஐவேளைத் தொழகைகளுக்கு முன் அங்கத் தூய்மை செய்து கொள்வது இஸ்லாமியர் மீது கடமையாகும். கொரொனோ மட்டுமல்ல எந்த ஒரு தொற்றும் நம்மை அண்டாமலிருக்க உதவும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இது இருப்பதால் இது இஸ்லாமியருக்கு மட்டுமல்ல, மாற்று மத அன்பர்களுக்கும் இது நல்லதே!

2. கூடவே ஒவ்வொரு அங்கத் தூய்மைக்குப் பின்னும் அந்த நேரத் தொழுகையையும் நீங்கள் நிறைவேற்றினால் உங்களுக்கு உங்களைப் படைத்த இறைவனோடு உரையாடவும் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு உண்டாகிறது. அதனால் உடல் நலத்தோடு மன நலமும் மேம்படும்!

3. மேற்கண்ட நடவடிக்கைகளை கீழ்கண்ட கொள்கை முழக்கத்தோடு- அதை மனமார உணர்ந்து உச்சரித்தால் -அது உங்களுக்கு இம்மையிலும் அமைதியான வாழ்க்கையைத் தரும். மறுமையில் சொர்க்கத்தையும் பெற்றுத் தரும். நரகத்தில் இருந்து பாதுகாக்கும்!

“லா இலாஹா இல்லல்லாஹ்- முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” (பொருள்: வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் அல்லாஹ் மட்டுமே- முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் )

– ஆம், அன்பர்களே இதுதான் இஸ்லாம் என்பது. அனைத்து மனிதகுலத்திற்கும் சொந்தமான வாழ்வியல் கொள்கை!இதை நீங்கள் பின்பற்ற ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறக்கவேண்டும் என்பது இல்லை. தொப்பியோ தாடியோ லுங்கியோ புர்காவோ அணிந்தவராக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. கண்ணியமான -வரம்பு பேணிய- ஆடை அணிந்தவராக இருந்தால் போதுமானது.

Share this Article

Add a Comment

Your email address will not be published.