Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
தர்மத்திலும் சமூகப் பொறுப்புணர்வு - Thiru Quran Malar

தர்மத்திலும் சமூகப் பொறுப்புணர்வு

Share this Article

இஸ்லாமியப் #பண்டிகைகள் இரண்டு. ஒன்று #ரம்ஜான் மற்றது #பக்ரீத். இப்பண்டிகைகளை யாரும் தனியாகக் கொண்டாட முடியாது. இவற்றில் சமூகத்தோடு இணைந்து #தொழுகைகள் நிறைவேற்றப்படும். சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளும் அன்று நிறைவேற்றப்பட  வேண்டும்.

இப்பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் அன்று இறைவனின் கட்டளைக்கேற்ப பிராணிகளை அறுத்து பலியிடப்படும். அதன் மாமிசத்தை பலியிடுபவர்களும் அவர்களது குடும்பங்களும் மட்டுமல்லாது அக்கம்பக்கத்து ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படும். #குர்பானி என்ற #நபிகளாரின் காலத்தில் இந்த இறைச்சிக்கு குர்பானி இறைச்சி என்று வழங்கப்படும். இந்த இறைச்சியை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வைத்து உண்ணலாம். அதற்கு தடை ஏதும் இருக்கவில்லை.

இவ்வாறு இருக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை, “உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்” என்று அறிவித்தார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், “இறைத்தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள்.
 அதற்கு  இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, அவ்வாறு செய்ய வேண்டியதில்லை); கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)”
என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பு : சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 3992) 

Share this Article

Add a Comment

Your email address will not be published.