Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இஸ்லாம் புதியது அல்ல! - Thiru Quran Malar

இஸ்லாம் புதியது அல்ல!

Share this Article

இந்த வீடியோவில் சொல்லப்படும் அனைத்து  மனித குலத்திற்கும் பொதுவான அறிவுரைகளைத்தான்  இன்று #இஸ்லாம் மறு அறிமுகம் செய்கிறது. #முஹம்மது நபியவர்கள் புதிதாக ஒரு மதத்தையோ மார்க்கத்தையோ  போதிக்கவில்லை.

 அவருக்கு முன்னர் இந்த பூமியின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்ற அதே இறைநேறியைத் தான் மீண்டும் போதித்து அதன் மூலம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட உலகமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.  

#ஒன்றே #குலம் #ஒருவனே #இறைவன் என்பது உண்மையானால் அந்த ஒரே இறைவன் ஒரே மார்க்கத்தைத் தானே போதிப்பான்? அதுதான் இன்று இஸ்லாம் என்று அறியப்படுகிறது

இஸ்லாம் என்ன கூறுகிறது தெரிந்து கொள்ளுங்கள் மாற்று மத சகோதர்களே !!!அனைவரும் தெரிந்து கொள்ள பகிரவும்

Publiée par Irfana Abu Backer sur Dimanche 18 septembre 2016

ஆனாலும் இன்று ஏன் இஸ்லாம் தவறான ஒளியில் ஊடகங்களில் சித்தரிக்கப் படுகிறது?

ஸ்ரீ  இஸ்லாம் உலகளாவிய மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவது இனத்தின், நிறத்தின், குலத்தின் மேன்மைகளைக் கூறி மக்களைப் பிரித்து சுரண்டி வாழ்வோரால் சகித்துக்கொள்ள முடிவதில்லை!

ஸ்ரீ  படைத்த இறைவனை இடைத்தரகர்கள் இன்றி வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி நேரடியாக வணங்க இஸ்லாம் சொல்லும்போது கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இடைத்தரகர்களையும் ஆதிக்க சக்திகளையும் அது அமைதி இழக்கச் செய்கிறது!

ஸ்ரீ  உலகில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் அநியாயங்களும் மனித உரிமை மீறல்களும் தடுக்கப்படவேண்டும். ஏட்டளவில் பேச்சளவில் என்று இல்லாமல் இஸ்லாம் நடைமுறையில் மக்களை அதற்கு வழிநடத்துகிறது.

ஸ்ரீ  நன்மையை எவுவதையும் தீமையைத் தடுப்பதையும் இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகவே கற்பிக்கிறது இஸ்லாம்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)

இஸ்லாம் என்றஉலகளாவிய இயக்கத்தில் மக்கள் இணைய இணைய இதன் வளர்ச்சி  வல்லரசு – கலோனிய – ஏகாதிபத்திய- சக்திகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த  வளர்ச்சியின்  காரணமாக மக்கள் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் அவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த ஆதிக்க  சக்திகளுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள்.  

இவ்வாதிக்க சக்திகளின் அடிமைத்தளையில் இருந்து தங்கள் நாடுகளை விடுவிப்பதற்காக அவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசுகளுக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார்கள்.

காலனி ஆதிக்கம் தொடங்கிய நாள் முதலே இந்த நாடுகளின் எண்ணெய் வளங்களையும், நிலத்தடி வளங்களையும் இயற்க்கை வளங்களையும் காலாகாலமாக நடத்திவரும் கொள்ளையும், தங்களின் ஆயுத  விற்பனைக்காக எண்ணைவள நாடுகளுக்கு இடையே வெறுப்பு அரசியல் விதைத்து இவர்கள் நடத்திவரும் போர்களும், வட்டி சார்ந்த பொருளாதார ஏற்பாடுகள் மூலம் உலக நாடுகளின் சம்பாத்தியங்களை உறிஞ்சும் சதியும் என அனைத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியால் தடைபடும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள். 

இஸ்லாத்திற்கு எதிரான தந்திரங்கள், சூழ்ச்சிகள் 

இந்த இஸ்லாமிய எழுச்சியை பரவவிடாமல் தடுக்க பல தந்திரங்கள் கையாளப் படுகின்றன.

ஸ்ரீ தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு தங்கள் நாட்டின் விடுதலைக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுவோரை கிளர்ச்சி யாளர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்தி சிறை களுக்குள் வைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்துதல்.

ஸ்ரீ இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாடுகளில் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுத பலமளித்து அவர்களைக் கொண்டே கலவரங்கள் மூட்டியும் பயங்கரவாத தாக்குதல்கள்,குண்டு வெடிப்புகள் போன்றவை நடத்தியும்  இஸ்லாமி யர்களைக் கொல்வது, அதன்மூலம் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும்  பற்றி தப்பெண்ணம் உருவாக்குவது.

ஸ்ரீ தன் கையாட்களைக் கொண்டு இஸ்லாத்தை தவறான ஒளியில் சித்தரிப்பதற்காக திரைப்படங்கள், கதைகள் புனைந்து அவற்றை ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி இஸ்லாத்தின் மீது வெறுப்பை உருவாக்குதல்.

இன்னும் இவைபோன்ற பலதும் செய்யப்பட்டாலும் இந்த இறைவனின் மார்க்கம்  தடைபடாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. (www.pewresearch.org)

ஆனால் உண்மையில் இஸ்லாம் எந்த ஒரு உயிரையும் அநியாயமாகக் கொல்வதோ துன்புறுத்துவதோ கூடாது என்று வன்மையாகத் தடுக்கிறது. அப்பாவிகளைக் கொல்வதும் துன்புறுத்துவதும் பெரும் பாவம் அதை ஒரு முஸ்லிம் செய்தாலும் முஸ்லிம் அல்லாதவர் செய்தாலும் மறுமையில் அதற்கு நரக தண்டனை உண்டென்று எச்சரிக்கிறது குர்ஆன்:
 = எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:7,8)

மனிதனை மனிதனுக்கு எதிரியாக்கி ஏதேனும் ஒரு நாட்டையோ இனத்தையோ உயர்த்தவோ அழிக்கவோ வந்ததல்ல #இஸ்லாம். மாறாக மனித மனங்களை பண்படுத்தி  அதன்வழி உலகெங்கும் தர்மத்தையும் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் சுயசீர்திருத்த இயக்கமே #இஸ்லாம் என்பதை விளங்கும்போது இன்றைய எதிரிகள் நாளை இதன் சேவகர்களாகவும் காவலர்களாகவும்  மாறுவார்கள் என்கிறது வரலாறு!

Share this Article

Add a Comment

Your email address will not be published.