அழிவுக்கு முன் வரும் அறிகுறிகள்
உலக அழிவு நாளுக்கு முன் தோன்றும் சில அறிகுறிகளைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். இந்த அறிவிப்புகளில் பலதும் இன்று உண்மையாகி வருவதை வைத்தே நபிகளாரின் மொழிகளின் நம்பகத்தன்மையை உணரலாம். அவைப் பொய்க்காதவை என்றும் இறைவனிடம் இருந்து வந்தவையே என்பதையும் நாம் அறியலாம். கீழே அப்படிப்பட்ட நபிமொழிகள் எடுத்தாளப்பட்டுள்ளன அவற்றின் இறுதியில் நபிமொழித் தொகுப்பு நூல்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. கீழ்கண்ட நபிகளாரின் மொழிகள் 1430 வருடங்களுக்கு முன்னால் சொல்லப்பட்டவை என்பதையும் இவை அன்றைய மக்களுக்கும் இன்றைய மக்களுக்கும் நாளைய மக்களுக்கும் பொதுவாக சொல்லப்பட்டவை. என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இவர்களுக்கிடையே உள்ள அறிவு வளர்ச்சியின் வேறுபாட்டையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இவற்றின் உண்மையான ...