பெண்களே, அழியாத அழகு வேண்டுமா?
ஏக இறைவனின் திருப்பெயரால் நீங்கள் தினமும் நின்று அழகு பார்க்கும் கண்ணாடியின் முன் ஒருகணம் நின்று பாருங்கள்….. இம்முறை அழகு பார்ப்பதற்காக அல்ல… அதைத்தான் தினமும் பார்க்கிறீர்களே!இப்போது நீங்கள் நிற்ப்பது… உங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்காக… நீங்கள் எவ்வளவு விலைமதிப்பற்றவர் என்பதை அறிந்து கொள்வதற்காக! உங்கள் கண்கள், மூக்கு, வாய், காதுகள் பற்கள், நாக்கு, தலைமுடி என தொடங்கி அடிமுதல் முடிவரை சற்று பார்வை இடுங்கள்… எத்தனை எத்தனை அற்புதங்களை நீங்கள் தாங்கி நிற்கிறீர்கள்! கோடிக்கணக்கான செல்கள் வெளியே தோலாகவும் உள்ளே சதையாகவும் ஒரு இடத்தில் கண்ணாகவும் நாக்காகவும் மூக்காகவும் மூளையாகவும் மறு இடத்தின் கல்லீரல் நுரையீரல், கணையம், இதயம் என உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் உறுப்புக்களாகவும் உருக்கொண்டு நிற்பதை அறிவீர்கள்… ...
இறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்
இறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னுதாரண வாழ்க்கையில் இருந்தும் பெறப்படுபவையே இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள். இவற்றை பேணுவது ஒவ்வொரு...