#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_4 கட்டை ராஜாவின் சாம்ராஜ்ஜியம் கட்டை ராஜா… இவன் ஒரு வலுவான பேட்டை  ரவுடி… அவனையும் அவனது அடியாட்களின்  கும்பலையும் தட்டிக்கேட்க அவ்வூரில் யாரும்  இல்லை. பெயரால் மட்டுமல்ல அவன்தான்  அந்தப் பேட்டைக்கு ராஜாவைப் போல.  காவல்துறையும் கூட அவன் ஏவலுக்குக்  கட்டுப்பட்ட நிலை. தனது கையாட்களைக்  கொண்டு ஆயுத பலத்தால் நினைத்ததை  நடத்தி முடிக்கும் ஆற்றல் கொண்டவன்.  அவன் நினைத்த சொத்துக்களை அவ்வூர்  மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு  விலை பேசி தனது கைவசமாக்குகிறான்.  அவ்வூரில் தான் விரும்பிய பெண்களை  அனுபவிக்கவும் செய்கிறான்.அவனது  தொல்லைகளில் இருந்து தப்பிக்க அவனுக்கு  தவறாமல் அவ்வூர் மக்கள் தங்கள் உழைத்து  சம்பாதிப்பவற்றில் இருந்தும் தங்கள்  பெண்களின் கற்பை அடகு வைத்தும்  கப்பம் கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள்.  அவர்களது கண்ணீரும் கவலைகளும்  அவனுக்கும் அவனது கும்பலுக்கும் ஒரு ...