பணம் வந்த கதை
இன்று உலக மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீது வஞ்சகமாக சுமத்தப்படும் பொருளாதார நெருக்கடி ஒரு மிக முக்கியமான காரணியாகும். இயற்கையாகவே பற்பல வளங்களும் செழிப்பும் நிறைந்த இந்த பூமியில் ஒரு சில மக்களின் அளவுக்கதிகமான பொருளாசை காரணமாக நலிந்த மக்களின் மீது வறுமையும் நோய்களும் போர்களும் தொடர்ச்சியாக திணிக்கப்படுகின்றன. நல்லிணக்கத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வோடும் மக்கள் வாழ முற்பட்டாலும் அவர்களைப் பிரித்து அவர்களுக்கிடையே வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் விதைத்து அவர்களைப் பிரித்தாண்டு தங்கள் சுயநல வேட்கைகளைத் தீர்த்துக் கொள்கிறது அந்தக் கொடியோர் கூட்டம். அவர்கள் உலகின் மீது எவ்வாறு இந்த ஆதிக்கத்தை அடைந்தார்கள்? அதை அறிய நீங்கள் பணம் வந்த வரலாற்றை தெரிந்தாக வேண்டும். கதையல்ல, நிஜம்…...
கள்ளப்பணமா நல்ல பணமா?
அன்றெல்லாம் ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு.. என்று கதை ஆரம்பிக்கும்..இன்று நடைமுறை வேற மாதிரி…ஒரு பெரிய ஊர்ல பெரிய ரவுடி இருந்தானாம்.. அவன் கட்டப் பஞ்சாயத்து செஞ்சு அவனோட சாம்ராஜ்ஜியம் அங்கே நீண்ட...
விவசாயிகள் தற்கொலைகள் ஏன்?
இங்கு நல்லசாமி அவர்கள் கூறும் உண்மைகளை நாடு முழுக்கப் பரப்ப வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்டவர்களின் தலையாய கடமை இது. நம்நாட்டை சிக்க வைத்திருக்கும் சதி வலையையும் சதிகாரர்களையும் அடையாளம் காண...