Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
கடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க.... - Thiru Quran Malar

கடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க….

Share this Article

கடவுளின் பெயரால் மக்கள் சுரண்டப் படுவதற்கும் அதைக் கண்டு பலர் நாத்திகத்தின் பால் ஒதுங்குவதற்கும் காரணம் இடைத் தரகர்களே. அவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக மதத்தின் பெயரால் புகுத்தும் மூடநம்பிக்கைகள் ஜாதிகள், தீண்டாமை, அறியாமை, பெண்ணடிமை இன்னும் பல சமூகத் தீமைகளுக்கு வித்திடுகின்றன. ஆனால் படைத்தவனோ நம்மை நேரடியாக அவனை வணங்குமாறு திருக்குர்ஆனில் பணிக்கிறான்

இறைவன் நெருக்கமானவன்

2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ”நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.

இறைவனிடம் மன்றாட தரகர் தேவை இல்லை.

10:18 தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத இறைவன் அல்லாதவற்றை வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள், ‘இவை எங்களுக்கு இறைவனிடம் மன்றாட்டம் செய்பவை’ என்றும் கூறுகிறார்கள்.. அதற்கு நீர் வானங்களிலோ, பூமியிலோ இறைவன் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்’ என்று கூறும்.

போலி தெய்வங்கள் வழிகேட்டுக்கே வழிவகுக்கும்

14:30 மேலும், அவர்கள் இறைவன் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி, ‘இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்¢ நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்’ என்று நீர் கூறிவிடும்.

போலி தெய்வங்களுக்கு சக்தியேதும் இல்லை

35:40 ‘இறைவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? ‘அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?’ என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?’ என்று (நபியே!) நீர் கேட்பீராக

21:66 ‘(அப்படியாயின்) இறைவனையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்’ என்று கேட்டார்.

7:194 நிச்சயமாக இறைவனையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!

22:73 மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக இறைவனையன்றி(வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது.  இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது¢ தேடுவோனும், தேடப்படுவோனும் பவஹீனர்களே.

Share this Article

Add a Comment

Your email address will not be published.