Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
நாய் படுத்தும் பாடு - Thiru Quran Malar

நாய் படுத்தும் பாடு

Share this Article

தீயினால் சுட்ட புண் ஆறலாம்
நாவினால் சுட்ட புண்ணும் ஆறலாம்
மன்னிப்பு கோருவதால்  – ஆனால்
நாயினால் ஆன  புண் ஆறுவது எளிதல்ல,
நோய் கண்டு மரணம் வரும் வரை!
என்று கூறும் அளவுக்கு அது கொடூரமான ஒன்றாக இருக்கிறது என்பதே உண்மை! 

நாயோடு பழகுதல் நல்லதல்ல!

இறைவன் கற்பிக்கும் எவல்- விலக்கல்களை ஏற்று வாழ்வதே இஸ்லாம் எனப்படும். இறைவன் ஒரு விஷயத்தை வேண்டாம் என்று தடை செய்தால் அது முழு மனிதகுலத்திற்கும் கேடானதாகவே அமையும். இன்றில்லாவிடினும் காலம் அதைத் தெளிவு படுத்தும்.வீட்டுப்பிராணி போல நாயை வளர்ப்பதற்கும் அது வாய்வைத்த நீரை பயன்படுத்துவதற்கும் இஸ்லாத்தில் தடை உள்ளது. கீழ்கண்ட நபிமொழிகளில் இருந்து இதை அறியலாம்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:= “எந்த வீட்டில் நாயோ உருவப்படமோ உள்ளதோ அங்கு வானவர்கள் நுழைய மாட்டார்கள்” அறிவிப்பவர்:அபூ தல்ஹா(ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

“நாய் வளர்ப்பவர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு கீரத் (இரு மடங்கு உஹது மலையளவு) நன்மையை (புண்ணியங்களை) இழக்கின்றனர்அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி), நூல்: புகாரி.

=: “உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.” அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 

= “நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்”
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

மேற்கண்ட இரு செய்திகளின் வாயிலாக நாய் வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை நேரடியாக விளங்கிக் கொள்ளலாம்.
குறிப்பு: அதேவேளையில் விவசாயம், வேட்டையாடுதல் போன்ற காரணங்களுக்காக நாயை வளர்த்தல் அனுமதிக்கப்பட்ட ஒன்று. 

“விவசாயம், கால்நடை பாதுகாப்பு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றிற்கு மட்டும் நாய் வளர்க்கலாம்” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி),  நூல்கள்: முஅத்தா,திர்மீதி, நஸயீ)

நாயை நக்க விடாதே!

வீட்டுப்பிராணி போல நாயை வளர்ப்பதற்கும் அது வாய்வைத்த நீரை பயன்படுத்துவதற்கும் இஸ்லாத்தில் தடை உள்ளது. கீழ்கண்ட நபிமொழிகளில் இருந்து இதை அறியலாம்:

“எந்த வீட்டில் நாயோ உருவப்படமோ உள்ளதோ அங்கு வானவர்கள் நுழைய மாட்டார்கள்” அறிவிப்பவர்:அபூ தல்ஹா(ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

=: “உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.” அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 

உண்மைப்படுத்தும் நவீன மருத்துவ அறிவியல்

நாயின் வாயில் உள்ள கிருமிகள் பற்றிய ஆய்வு செய்த லண்டன் க்வீன் மேரி பல்கலைக்கழகத்தின் நச்சுயிரியல் மற்றும் நுண்மவியல் பேராசிரியர் (Virology and bacteriology) ஜான் ஆக்ஸ்போர்ட் கூறும்போது, ” நாய்கள், வாழ்க்கையின் பாதி நாட்களை பல அசுத்தமான இடங்களை முகர்ந்து வருவதால், அதன் வாய் முழுவதும் பல வகையான அசுத்தங்களும் கிருமிகளும் நிறைந்து காணப்படுகின்றன.

நாய்களை முத்தமிடுவது, அவைகளின் நாக்கால் நம்மை நக்க விடுவதின் மூலம் பல கொடுமையான கிருமிகள் மனிதனை பாதிக்கின்றன. நாயின் வாய் மூலம் பரவும் கிருமிகளின் சில:- Staphylococcus Aureus- Capnocytophaga Canimorsusநாய்களைப் பொறுத்தவரை இந்த பாக்டீரியாக்கள் அவற்றின் உடலுக்கு ஊறு செய்வதில்லை. ஆனால் மனித உடலுக்கு அவை பகிரப்ப்படும்போது பெரும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

ஏற்கனவே உள்ள புண்களை நாய்கள் நக்குவதன் மூலம் இன்னும் வீரியமாக தோல் நோய்கள் உருவாகின்றன. அதனால் ஒரு காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ஒருவர்.படத்தில், இவரின் கையில் உள்ள காயத்தில் நாய் நக்கியதால் ஏற்பட்ட விளைவு.நன்றி : http://www.davidwolfe.com/never-let-dog-lick-you/

ஜீவகாருண்ய  அமைப்பினரின் போலித்தனம் 

அற்ப விளம்பரத்துக்காக (cheap publicity) தெருநாய்களுக்கு வக்காலத்து வாங்கும் ‘ஜீவ காருண்ய” அமைப்பினர்கள் இந்த வீடியோவில் காட்டப்படும் மரண நிலையில் தங்களையும் அல்லது தங்கள் குழந்தைகளையும் இருத்திப் பார்க்கட்டும்…இறைவன் நம் அனைவரையும் இப்படிப்பட்ட மரணத்தில் இருந்து காப்பாற்றுவானாக. ஆமீன்

https://www.facebook.com/watch/?v=1067966156587182

Share this Article

Add a Comment

Your email address will not be published.