மக்கள்தொகை பெருக்கமும் பாடங்களும்!
http://www.worldometers.info/world-population/
என்ற இணைய தளம்16-3-2018 தேதியில் பூமியின் மக்கள்தொகை சுமார் 7.6 பில்லியன் என்று காட்டுகிறது.
1960 ஆம் ஆண்டு பூமியின் மீது 3 பில்லியன் மக்களே இருந்தார்கள்.
மக்கள் தொகை அதிகரிப்பு பற்றி பல கண்ணோட்டங்களையும் எதிரொலிகளையும் நாம் மக்களிடையே காண முடிகிறது..· நாமே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம், இதில் இவர்கள் வேறா? நமது வறுமை இன்னும் கூடுமே என்ற கவலை சிலருக்கு.· .வறுமைக்குக் காரணம் மக்கள் தொகை அல்ல, மாறாக அநியாயமான பொருள் பங்கீடுதான் என எதிர் வாதம் செய்வார்கள் சிலர்.·
மக்கள் தொகை அதிகரித்தால் மனித வளம் அதிகரிக்கும். நாடு இன்னும் முன்னேற வாய்ப்பு என்று கூறுவார் சிலர்.· இத்தனை கோடி மக்களில் எனது இடம் எத்தனையாவது? என்று ஆவல் கொள்வோர் ஒருபுறம்.· உலகம் எக்கேடோ கேட்டுப் போகட்டும்! எனக்கு பாதிப்பு வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்குவோர் ஒருபுறம்.
இவ்வாறு பல எதிரோலிகளுக்கிடையே நாம் அனைவரும் மறந்துபோகும் ஒரு விடயம் உண்டு. அதைத்தான் நாம் முக்கியமாக கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.இன்று பூமியின் மீது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம் உட்பட 830 கோடி. அதாவது ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகி பூமி உருண்டையின் மீது பரவி வாழ்ந்துகொண்டு இருந்தவர்களில் எஞ்சியவர்களின் எண்ணிக்கைதான் 760 கோடி என்பது!
சில கணக்கெடுப்புகளின் படி மனிதகுலம் பூமியின்மீது தோன்றிய காலம் கிமு. 8000 எனக் கொண்டால் இதுவரை 10800 கோடி மக்கள் இந்த பூமிப்பந்தின் மீது வந்திருக்கிறார்கள். (கருக்கொலைகளைக் கணக்கிட்டால் எண்ணிக்கை இன்னும் பூதாகரமாக மாறும் என்பது தெரிந்ததே!) ( தகவல்: Population Reference Bureau, UN www.livescience.com)
இவர்களின் ஒரு பகுதி ஏற்கனவே இதன் மீது இருந்து மறைந்து விட்டது.· இவர்கள் இங்கு வந்திருப்பதன் நோக்கம் என்ன?· இங்கு வந்து அவதிப் படுவதற்காகவா?· நமது வறுமையைக் கூட்டுவதற்காகவா தொடர்ந்து இங்கு வருகிறார்கள்?· அல்லது நமது செல்வ செழிப்பை அதிகரிப்பதற்காகவா?· அல்லது இங்கு இந்த அற்பகால சுகத்தையும் துன்பங்களையும் அனுபவித்துவிட்டு அனைத்தையும் துறந்துவிட்டு செல்வதற்காகவா?·
இங்கு வந்து உழைத்தும் உழைக்காமலும் தனக்குப் பிறகு வரக்கூடிய பல தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்துவிட்டுப் போவதற்காகவா?இக்கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாம் எங்கிருந்து பெற முடியும்? இறைவனை மறுக்கும் நாத்திகர்களிடம் இதற்கு பதில் கிடையாது என்பது தெளிவு. வேண்டுமானால் நீங்கள் கேட்டுப்பாருங்கள்.
அவ்வாறிருக்கும் போது ஆத்திகம் இதற்கு என்ன பதில்களை முன்வைக்கின்றதோ அவற்றை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அதன்படி நடப்பதுதானே அறிவுடைமை? காரணம் நாம் இங்கு வந்தபின் ஏன் வந்தோம் எதற்காக வந்தோம் இனி எங்கே போகிறோம் என்பதை அறிவதுதானே நமது வாழ்க்கைப் பயணத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கும்?
எல்லாம் யார் செயல்?
இந்த மனிதர்கள் யாரும் இவர்களாக இங்கு வருவதில்லை என்பதும் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் எல்லையற்ற ஆற்றலும் அறிவும் கொண்ட ஒரு சக்திக்கு உட்பட்டுதான் இவை நிகழ்கின்றன என்பதும் பகுத்தறிவு நமக்கு எடுத்துச் சொல்லும் பாடங்களாகும். அந்த மறைவான சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம்.
மனிதன் தோன்றிய காலந்தொட்டு அந்த இறைவன் தனது தூதர்களையும் அவர்கள் மூலமாக வேதங்களையும் செய்திகளையும் மனிதகுலத்திற்கு அவ்வப்போது அனுப்பி வந்துள்ளான். அந்த வகையில் இவ்வுலகுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத் தூதரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்கள் மூலமாக அருளப்பட்ட வேதமே திருக்குர்ஆன். நமது வாழ்க்கையின் நோக்கம் பற்றி பினவருமாறு இறைவன் கூறுகிறான்:
= உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும்,வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)
= அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 18:7.)
அதாவது பூமி என்ற பரீட்சைக் கூடத்தில் நாம் விடப்பட்டு நம் வினைகள் கண்காணிக்கப் படுகின்றன என்பதைத்தான் மேற்படி வசனங்களில் அவன் கூறுகிறான். அதாவது இவ்வாழ்க்கை என்ற பரீட்சையை இப்போது எழுதிக்கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கைதான் 830கோடி இதற்கு முன்னர் 10800 கோடி மக்கள் இதை எழுதி முடித்துச் சென்று விட்டார்கள்.
இன்னும் அன்றாடம் சென்றுகொண்டும் இருக்கிறார்கள். அவர்களாகச் செல்வதில்லை, ஆனால் பலவந்தமாக இப்பரீட்சைக் கூடத்திலிருந்து துரத்தியடிக்கப்படுகிறார்கள். தனித்தனியாகவும் கூட்டம்கூட்டமாகவும் துடைத்தெறியப் படுகிறார்கள்.· இவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள்?· எத்தனை பேர் தோல்வி கண்டார்கள்?· அவர்களின் நிலை என்ன?·
அவர்களைத் தொடர்ந்து நாளை நாம் இங்கிருந்து தூக்கி வீசப் படுவோம் அல்லவா? நமது நிலை என்னவாக இருக்கும்?· நாம் செல்லுமிடம் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால் இன்று நாம் என்ன செய்ய வேண்டும்?
பயனுள்ள ஆராய்ச்சி
இந்த வகையிலான சிந்தனை அல்லது ஆராய்ச்சி மற்றெல்லாவற்றையும் விட நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இதோ நம்மைப் படைத்தவன் பல்வேறு காலகட்டங்களில் இந்த பூமியின் மீது நடந்ததை நமக்கு நினைவூட்டுகிறான் பாருங்கள்:
32:26. இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும், அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும், இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா? நிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
19:98. அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
இப்போது நமது தவணை … இதில் #இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர்கள் வெற்றி அடைகிறார்கள்.. #சொர்க்கம் செல்கிறார்கள். இறைவனின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து தான்தோன்றித்தனமாக வாழ்க்கையைக் கழிப்பவர்கள் #நரகம் செல்கிறார்கள்
= 10:14. நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.