அழியாத தியாக வரலாறுகள்!
மீண்டும் மீண்டும் தொடரும் தொடர் வரலாறு இது. இன்றும் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கிறது இந்த விடுதலைப் போராட்டம்!
எதற்காக இவர்கள் சித்திர வதை செய்யப்படுகிறார்கள்?
= (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை. (திருக்குர்ஆன் 85:8)
உலகெங்கும் நலிந்தோரையும் அடக்குமுறைக்கு ஆளானோரையும் விடுவிக்கும் இந்த இயக்கம். இறுதி நாள் வரை தொடரும்.
இந்த இறைவனின் தூதரைப் பற்றியும் இவரைப் பின்படுவோரைப் பற்றியும் இறைவேதம் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
7:157. (எனவே இன்று) அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத ‘நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்.
https://www.facebook.com/kuruweeupdates/videos/ 193533760830984/?t=2&v=193533760830984