Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
அண்டை வீட்டாருக்கு அன்பு செய்! - Thiru Quran Malar

அண்டை வீட்டாருக்கு அன்பு செய்!

Share this Article

அண்டைவீட்டார்  எம்மதமாக இருப்பினும் அவர்களோடு அன்பு பாராட்டவேண்டியது ஒரு இறைவிசுவாசியின் கடமை.
சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சிறிதை சேர்த்து சமைக்கச்சொல்கிறது ஈகை குணத்தை வலியுறுத்தும் இறைவனின் மார்க்கம்.

”அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்வீராக..! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக..!” என்று நபி(ஸல்) அவர்கள் தன் தோழருக்கு உபதேசம் செய்தார்கள். (நூல் : முஸ்லிம்)  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
“தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் இறை விசுவாசியாக மாட்டார்.’(நூல்-முஸ்னத் அபூ யஃலா)

=  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டைவீட்டாருக்கு நோவினை தரவேண்டாம்.

=  ஒரு முறை நபிகள் கூறினார்கள்:ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் பக்கத்து வீட்டுக்காரரின் கடமைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் நான் நினைத்தேன், அனந்தர சொத்து (வாரிசு உரிமையிலும்) பங்குக்கு அவர்களுக்கும் பங்குதாரராக ஆகிவிடுவார்களோ என்று எண்ணுமளவிற்க்கு.(ஜிப்ரீல்- இறைவனிடம் இருந்துஇறைச்செய்தி கொண்டுவரும் வானவர்)

= ஒரு முறை ஒரு நபித்தோழர் நபி அவர்களிடம் வந்து ஒருவர் பக்கத்துவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்று, அருமை நபிகள் இப்படி பதில் சொன்னார்கள்:  
 1. அவர் உன்னிடம் கடன்கேட்டால் கொடுப்பாயாக
 2. அவர் உதவி தேடினால் உதவி செய்வாயாக 
 3. நோயுற்றால் விசாரிப்பீராக 
 4. அவருக்கு தேவை ஏற்பட்டால் கொடுப்பாயாக 
 5. ஏழ்நிலை அடைந்தால் உதவி புரிவீராக. 
 6. அவர் வீட்டில் நலவு நிகழ்ந்தால் சந்தோசத்தில் பங்கேற்பீராக. 
 7. சோகம் நிகழ்ந்தல் வருத்ததில் பங்கேற்பீராக. 
 8. மரணம் நிகழ்ந்தால் அதில் பின் தொடர்ந்து சென்று அதில் முழுமையாக பங்கேற்பீராக. 
 9.அவருக்கு காற்று தடைபடும் வண்ணம் உன் வீட்டினை உயர்த்தாதே , அவர் அனுமதிதால் பரவாயில்லை. 
 10. பழங்கள் வாங்கி வந்தால் அவர்களுக்கும் கொடுப்பாயாக 
 11. அப்படி கொடுக்கிற அளவிற்க்கு வாங்கி வராமல் இருந்தால், உங்கள் குழந்தையிடம் அந்த பழங்களைக்கொடுத்து வெளியில் அனுப்பாமல் இருப்பாயாக. ( அடுத்த வீட்டு குழந்தைகள் பார்த்து ஏக்கம் ஏற்படால் இருப்பதற்க்கு).

Share this Article

Add a Comment

Your email address will not be published.