Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை! - Thiru Quran Malar

சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை!

Share this Article

இவற்றை வெற்று பிரச்சாரம் என்றோ மதபோதனை என்றோ யாரும் அலட்சியம் செய்ய வேண்டாம். கீழ்கண்ட எச்சரிக்கைகள் இவ்வுலகின் உரிமையாளனிடம் இருந்து வந்தவை. எனவே இவற்றைப் பேணாவிட்டால் இன்றில்லாவிடினும் மறுமையில் தண்டனை உறுதி!

மக்கள் கூடக் கூடிய இடங்களான இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் அசுத்தப்படுத்தி மக்களை ஏராளமானோர் துன்புறுத்து கிறார்கள். அவ்விடங்களுக்கருகில் நடந்து செல்வது மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. 

இங்கு அசுத்தம் செய்யாதீர்கள் என்று அறிவிப்புப் பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தாலும் அதைப் பொருட் படுத்தாமல் செத்தவன் காதில் சங்கு ஊதுவதைப் போன்று நடந்து கொள்கிறார்கள். இந்தத் தீய செயலை இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள்.

இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள், ”சாபத்தைப் பெற்றுத் தரும் இரு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ”சாபத்தைப் பெற்றுத் தரும் அந்த இரண்டு விஷயங்கள் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ”மக்கள் (செல்லும்) பாதையில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுதல். அல்லது அவர்கள் நிழலாரக் கூடிய இடத்தில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுதல்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 448

பொதுவாக மலம் கழித்து விட்டால் அனைவரும் கழுவி விடுவோம். ஆனால் சிறுநீர் கழித்தால் அதைப் பெரும்பாலானோர் தூய்மை செய்வதில்லை. அதை ஒரு அசுத்தமாகக் கணக்கிடுவதே இல்லை. ஆங்காங்கே சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாமல் இருந்து விடுகிறார்கள். இப்படி செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், ”இந்த சமாதிகளில் அடங்கியுள்ளவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய (குற்றம்) ஒன்றுக்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்களில் ஒருவன் சிறுநீர் கழித்து விட்டுத் தூய்மை செய்யாதவனாக இருந்தான். மற்றொருவன் கோள் சொல்¬த் திரிபவனாக இருந்தான்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: நஸயீ 2041

அதே நேரத்தில் இக்கொடிய செயல் ஈடுபடாமல் பாதையில் கிடக்கின்ற அசுத்தங்களை அகற்றினால் இது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக ஆகி விடுகின்றது. அதனால் இறைவனிடம் கூலியும் கிடைக்கிறது.

இறைநம்பிக்கையின் கிளைகள் 

‘இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளை கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது ‘இறைவனைத் தவிர வேறு வணக்கத்துக்கு உரியவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையி¬ருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 58

நம்மையும் நமது சுற்றத்தையும் தூய்மையாக வைத்து இறைவனின் நேசத்தைப் பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அவன் வழங்குவானாக!

Share this Article

Add a Comment

Your email address will not be published.