Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மதுப் பிரியர்கள் கவனத்திற்கு... - Thiru Quran Malar

மதுப் பிரியர்கள் கவனத்திற்கு…

Share this Article

நீங்கள் எந்த மதத்தை, நாட்டை, இனத்தை, நிறத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இருந்தாலும் சரி.. உண்மை இதுதான்.. இதை யாரும் மறுக்கமுடியாது.இது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ஒரு #பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது. 

இதில் #இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. 

அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்கத்தை நமது நிரந்தர வாழ்விடமாக அடையவேண்டுமானால் நாம் அவனது எவல்விலக்கல்களை பேணியே ஆகவேண்டும்.

இந்த வாழ்க்கைப் பரீட்சையில் இறைவனால் தடை செய்யப்பட்ட #மது மற்றும் #போதைப்பொருட்கள் மனிதனின் தனிநபர் வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய தீங்கு விளைவிப்பவை நாம் அனைவரும் அறிவோம்.

அவனது தடையை மீறி அவற்றை அருந்துவதால் மனிதனுக்கு இங்கு உண்டாகும் தீமைகளை விட மறுமையில் உண்டாகக்கூடிய வேதனைகளும் நரகத்து தண்டனைகளும் அதிபயங்கரமானவை.

= 20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது  அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும்மாட்டான்.

= 7:41 அவர்களுக்கு நரகத்தில்(நெருப்பு)  விரிப்புகளும் (போர்த்திக்கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும்உண்டு- இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

= 78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பலயுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!……கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!

அற்பமான தற்காலிக வாழ்க்கை

இன்று நாம் வாழும் தற்காலிகவாழ்கை என்பது மறுமையோடு ஒப்பிடும்போது மிகமிக அற்பமானதே.

= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவன் மீதாணையாக! மறுமையோடு  ஒப்பிடும்போது  இவ்வுலகின் நிலையானது,  உங்களில் ஒருவர் தமது இந்த அதாவது சுட்டு  விரலை கடலில்  வைப்பதைப் போன்றுதான்.  அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது  என்று அவர்  பார்க்கட்டும். (நூல் : முஸ்லிம் 5490)

இங்கு மனிதன் செய்யும் அத்துமீறல்கள் ஒவ்வொன்றும் தவறாமல் பலவகைகளில் பதிவாகின்றன. இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் பதிவு செய்கின்றனவோ அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

 வேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.நமது வினைப் பதிவு இயந்திரங்கள்
இன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும்  காது, கண், தோல்  இவற்றை மறைத்துக்கொண்டு  செய்ய முடியாது.

 நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இந்த உணர்வு நம்மில்  எப்போதும்  இருக்குமானால் நம்மைப் பாவங்கள்  அண்ட வாய்ப்பில்லை.

மேலும், இறைவனின்பகைவர்கள்(நரகத்) தீயின்பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித்தனியாகப்)  பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)

ஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை  அவனோடு ஒட்டி  உறவாடிக் கொண்டிருப்பவை  அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும்.  ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் ஒளி  அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும்  அவற்றை உரிய  இடங்களில் பதிவு  செய்வதையும் இன்றைய அறிவியல்  நமக்கு   சொல்லித் தருகிறது. 

இவற்றோடு தோல்களும் நம் செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி  நிற்கின்றன என்பது  மேற்படி வசனம்  எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று  விசாரணையின்போது அவை மனிதனைக்  காட்டிக்கொடுக்கும் போது அங்கு  நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக்  கட்டுகிறான் இறைவன்:

41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.

41:22.  “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.

41:23. ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).

41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் – அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.