Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
புலர்ந்துவரும் இறுதிநாள் அறிகுறிகள் - Thiru Quran Malar

புலர்ந்துவரும் இறுதிநாள் அறிகுறிகள்

Share this Article

இறைவனின் இறுதித்தூதர்  முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் இறுதி நெருங்கும்போது நடக்கக்கூடிய நிகழ்வுகள் சிலவற்றை முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்  சுருக்கமாக அவை:

= ”நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்” என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)
= ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்  (புகாரி)    
=‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை       மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின்    அடையாளங்களில் ஒன்று” (புகாரி)
= ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி       வாழ்வார்கள் (புகாரி)
= யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் (புகாரி)
= ‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம்   அவர்கள் கூறிய போது ‘எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார்.       அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம்       ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.
(புகாரி)
= செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்       கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும்   நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது (முஸ்லிம்)
= காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு   வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு  விநாடி போன்று ஆகும்.
(திர்மிதீ)
= கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (புகாரி)
= பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்       நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (புகாரி)
= ”ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது” (முஸ்லிம் -157)
= விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்தான். (புஹாரி)
= தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)
= ஒரு காலம் வரும் ”மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்”. (புஹாரி)
= என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)
= அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)
= ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)
= சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)
= காலையில் இறைநம்பிக்கையுடனும் மாலையில் இறைமறுப்புடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)
= எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்)
= முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)
= பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)
= பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)
= மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்       அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379,
= கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று   நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: அஹ்மத் 10306.

= ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள்       என்பதும் நபிமொழியாகும். நூல் : முஸ்லிம் 3971, 5098

= விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும்  மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: அஹ்மத் 1136

= தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511

= தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று     நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

= இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்   நபிமொழி. நூல்: புகாரி 7115, 7121

= ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக       முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: புகாரி 3609, 7121
= யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள்    அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 7119
= ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார்.  ‘நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை”  என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 1424
= திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)

Share this Article

Add a Comment

Your email address will not be published.