Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே! - Thiru Quran Malar

பாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே!

Share this Article

பசி எடுக்கும் போது சப்பிட வேண்டும்; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும்; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது, தாமதிக்காமல் கழிவறையை நாட வேண்டும். தாமதித்தால், அதுவே பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடும் என்பது அனைவரும் அறிந்ததே!

நன்றாகப் பசியோடு உள்ள ஒருவனிடம் ‘நீ இப்போது சாப்பிடக்கூடாது இன்னும் ஐந்து நாள் கழித்துதான் சாப்பிட வேண்டும்’ என்று சட்டம் பேசுவது எவ்வளவு விபரீதமோ அதைப் போன்றதே திருமணத்திற்கு வயது வரம்பை நிர்ணயிப்பதும்!

ஆம் பாலியல் அத்துமீறல்கள் நாட்டில் நடப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று!

வயதுக்கு வருதலே அறிகுறி

#இஸ்லாம் என்பது இயற்கையான மார்க்கம். அதன் சட்டதிட்டங்கள் எல்லாமே மனித இயற்கைக்கு ஏற்ற விதத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.ஒருவர் திருமணம் செய்யும் ஆயத்த நிலையை  – அதாவது வயதுக்கு வருதல், #இஸ்லாம் கற்பிக்கும் பெண்ணுக்கான மஹர் கொடுக்கும் சக்தி, இல்லறத்தில் ஈடுபடும் உடல்தகுதி போன்றவற்றை- அடைந்துவிட்டாலே அவர் #திருமணம் செய்யத் தகுதி பெற்று விடுகிறார்.

மாறாக அரசாங்கங்கள் 18, 21, 30 என்று நிர்ணயிக்கும் திருமண வயது என்பது செயற்கையானது. பற்பல விபரீதங்களுக்கு வித்திடுவது.ஒரு மனிதன் வயதுக்கு வருகிறான் என்பதன் அர்த்தமே அவனுக்கு அல்லது அவளுக்கு பாலியல் தேவைகள் ஏற்பட ஆரம்பித்து விட்டன என்பதுதான்.

மேலும், ஒரு பெண் வயதுக்கு வருகிறாள் என்பதன் அர்த்தமே, அவளது கருவறை குழந்தையைச் சுமக்கும் அளவுக்குப் பரிபூரண வளர்ச்சியை அடைந்து விட்டது என்பது தான்.பசி ஏற்பட்டால், உணவுக்கான ஏற்பாடுகள் ஆயத்தம் செய்யப்படுவது எப்படி அறிவார்ந்த செயலோ, அதே போலத்தான், வயதுக்கு வந்து விட்டால் அனாவசியமாக காலதாமதம் செய்யாமல், அவருக்குரிய ஜோடியை ஏற்பாடு செய்ய ஆரம்பிப்பதுதான் அறிவார்ந்த செயல்.

இல்லாவிட்டால், அது சமூக சீர்கேடுகளுக்கே நாளடைவில் வழிவகுக்கும்.இந்த உண்மைகளையெல்லாம் சரிவர உணர்ந்து தான் ஏற்கனவே #இஸ்லாம் திருமண வயது குறித்து எல்லை வரையறுக்காமல், அவரவர் உடற்கூற்றுக்கு ஏற்ப தீர்மானிக்கப் பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

இளவயதுத் திருமணங்கள் ஆபத்தானவையா?

அப்படி ஒரு மாயை உண்டாக்கப்பட்டு உள்ளது என்பதே உண்மை. திருமணத்திற்கு வயதெல்லை போடும் அரசாங்கங்கள் காதலுக்கும், சல்லாபத்திற்கும் வயதெல்லையைப் போடுவதிவில்லை என்பதை அறிவீர்கள். 18 வயதுதான் திருமண வயது என்றால் 18க்கு முன்னர் காதலிப்பதையும் சட்டப்படி குற்றமாக்க வேண்டும்தானே?

ஏன் செய்வதில்லை?வயதுக்கு வந்து #திருமணம் மூலம் இணைந்த ஒரு ஜோடியையும் வயதுக்கு வந்து திருமணமாகாமல் இணையும் ஒரு ஜோடியையும் நீங்கள் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். யாரால் சமூகத்திற்கு கெடுதி?

பெற்று வளர்த்த தாய் தந்தையரை ஏமாற்றுதல், அவர்களைக் கைவிட்டு ஓடிப்போகுதல், அந்நியனின் கருவை அநியாயமாகச் சுமந்து பின்னர் கைவிடப்படுதல், கருக்கொலை, சிசுக்கொலை, தற்கொலை, தந்தையற்ற பிள்ளைகளை வேண்டா வெறுப்போடு வளர்த்தல், ஒழுக்கமற்ற பிள்ளைகள் பெருக்கம், இவர்கள் மூலம் சமூகத்தில் உண்டாகும் குற்றங்கள் என பற்பல தொடர் தீமைகளின் காரணமாக இரண்டாம் வகையினர்  விளங்குகிறார்கள்.

மாறாக இளவயதில் #திருமணம் மூலம் இணைந்த தம்பதிகள் ஒழுக்கம் வாய்ந்த சமூகத்தை உருவாக்கும் அடித்தளம் அமைக்கிறார்கள். இளவயதிலேயே குடும்பப் பொறுப்புணர்வு, பெற்றோருக்குக் கீழ்படிதல், அவர்களோடு இணக்கம், முறையான குழந்தை வளர்ப்பு என பற்பல நன்மைகள் அங்கு உண்டாகின்றன. இல்லறத்தைப் பொறுத்தவரையில் முதற்காதல் என்பதே தன் வாழ்க்கைத் துணையோடுதான் என்ற அடிப்படையில் அந்த உறவு ஆழமாக தம்பதியர் உள்ளத்தில் பதியும். 

அதில் உருவாகும் சந்ததிகள் மீது ஈடுபாடும் பாசமும் ஆரோக்கியமான முறையில் இருக்கும். மாறாக இளவயதை காதலிலும் காமத்திலும் கழித்து இறுதியில் சூழ்நிலைக் கைதிகளாக வேண்டா வெறுப்போடு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளிடையே காதலுக்கு அந்தத் திருமணமே முடிவுரை எழுதி விடுகிறது.

Share this Article

Add a Comment

Your email address will not be published.