நபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?
முகநூலில் கேள்விகள்… Kastro Chinna “நபிகள் நாயகம் , இயேசு போன்றவர்களை நல்ல மனிதராக நல்ல தலைவராக ஏற்றுகொள்ளலாம். ஆனால் இறைவனின் தூதராக எப்படி கருத முடியும். எந்த இறைவன் வந்து சொன்னது இவர்தான் என்னுடைய தூதரென்று..?”Ponraj Göld நல்லா கேளுங்க பாஸ். இதைத்தான் நானும் கேட்டேன். என்னை நாத்திகவாதின்னு சொல்றாங்க———————–
பதில் : “மிக நேர்மையான சந்தேகம். பகுத்தறிவு பூர்வமான கேள்வி. அதே பகுத்தறிவுப் பார்வையோடு உங்கள் ஆய்வு தொடரட்டும். இதற்கு பதிலாக முன்வைக்கப்படும் விளக்கங்களையும் ஆதாரங்களையும் சற்று பொறுமை காத்து படித்துவிட்டு கருத்துரை இடுங்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை மேற்படி திருக்குர்ஆனின் அடிப்படையில் இருவரையுமே இறைவனின் தூதர்கள் என்றுதான் நம்புகிறோம். திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்த இறைவனின் வாக்குகளே என்பதற்கான ஆதாரங்களை அலசும் முன்பு இதை கொண்டுவந்த நபிகள் நாயகத்தின் சுருக்கமான வரலாறை அறிவோம்.