Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
உலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை! - Thiru Quran Malar

உலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை!

Share this Article

#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_3

பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்காக வங்கியாளர்கள் வழங்கிய ரசீதுகளே பணமாகப் பரிணமித்த கதையை அறிந்தோம். காகிதப்புழக்கத்தில்  சுகம் கண்டு மக்கள் வங்கிகளில் ஒப்படைத்த நாணயங்களை மறந்துவிட்ட காரணத்தால் வங்கியாளர்கள் அவற்றை வட்டிக்கு விடவும் அதே “பணத்தைக்’ கொண்டு நாட்டையே விலைக்கு வாங்கியதையும் இதுவரையில் கண்டோம். இனி நாம் பார்க்க இருப்பது நாட்டை விலைக்கு வாங்கியவர்களால் உலகை விலைக்கு வாங்க முடியாதா? என்பதுதான்.

மனித வரலாற்றில் நாணயங்களும் வங்கி  முறைகளும் முன்பே இருந்திருக்கின்றன.  ஆனால் இன்று நாம் வாழும் உலகை  கையகப்படுத்தி நம்மையெல்லாம்  அடிமைப்படுத்தி வைத்திருக்கும் வங்கி  அமைப்பைப் பற்றி மட்டும் தற்போது  கவனிப்போம்.நாம் வாழும் இந்தியாவையும் உலகின் மிகப்பெரும் நாடுகளையும் பெருமளவில் அடிமைப்படுத்தி காலனி ஆதிக்கம் செய்தவர்கள் யார் என்றால் ஆங்கிலேயர்கள் அல்லது பிரிட்டன் என்போம்.

ஆனால் நம் நாட்டை ஆதிக்கம் செய்த கிழக்கிந்திய கம்பெனி என்ற தனியார் வணிக நிறுவனம்தான் இதை நிகழ்த்திக் கொண்டிருந்தது என்பதே உண்மை. இதன் உரிமையாளர்கள் ரோத்சைல்ட் என்ற யூத குடும்பம். இவர்களுக்கு ஆங்கிலேய அரசின் மீது எவ்வாறு அதிகாரம் கிடைத்தது? ஆம், அதே பணம் வந்த கதைதான் இதற்கும் காரணம்.

இவர்களைப் பற்றிய சுருக்கமான தகவல் இதோ:மேயர் ஆம்செல் ரோத்சைல்ட்(1744–1812) (Mayer Amschel Rothschild,) 1760ஆம் ஆண்டு  தனது ஐந்து மகன்கள் மூலம் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, இத்தாலி நாடுகளின் தலை நகரங்களில் இயங்கக்கூடிய பன்னாட்டு வங்கிக் குழுமத்தை நிறுவினார். இந்தக் குடும்பம் பிற்காலத்தில் இக்குடும்பம் இங்கிலாந்திலும் ரோமப் பேரரசிலும் அரச அந்தஸ்திற்கு உயர்த்தப் பட்டார்கள் என்ற தகவலை நாம் விக்கிபீடியாவில் காணலாம்.

உலக மகா வங்கி அமைப்பு

எந்த நாட்டிலும் அங்கு வங்கி அமைத்து “பணம” உருவாக்க யாரால் அவர்கள் கைகளிலேயே ஆதிக்கம் சென்றடையும் என்பதை நாம் உறுதியாக அறிகிறோம். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டில் உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டு சேர்ந்து வலுவான வங்கி அமைத்து ஆதிக்கத்தைக் கைப்பற்றினால் நிலைமை எப்படி இருக்கும்? 

அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான்  வாங்கமுடியாது? அந்நாட்டு அரசாங்கமும்  மாஃபியாவும் இந்தத் தனியார் முதலாளிகளுக்கு  துணையாக இருந்தால் அவர்களால் செய்ய முடியாதது ஏதும் இருக்குமா?  ஆம்,  அவ்வாறு உருவானதுதான் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி. (Federal Reserve Bank) அது அச்சிட்டு வெளியிடும் கரன்சிதான் டாலர்

பெடரல் ரிசர்வ் வங்கியின் உருவாக்கம்

இன்று அகில உலகத்தில் உள்ள அனைத்து  வங்கிகளையும் தனது கட்டுக்குள் அடக்கி வைத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ  நிர்வகித்து வரும் வங்கி அமெரிக்காவில் உள்ள  பெடரல் ரிசர்வ் வங்கி. 1910ம் ஆண்டு  அமெரிக்காவின் ஜெக்கிள் தீவில் (Jekyll Island)  ரோத்ச்சைல்டு, ராகஃபெல்லர்,   ஜே.பி.மோர்கன் ஆகிய மூன்று யூத வங்கி  முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி  முதலாளிகள் சிலரோடு ரகசியமாக  சந்தித்தார்கள். சட்டவிரோதமாக தாங்கள்  சம்பாதிக்கும் பணத்தையெல்லாம்  பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை  கொண்டு மேலும் மேலும் கொள்ளை  லாபம் அடிப்பதற்கும் ஒரு பெரும் வங்கி  உருவாக்குவதென முடிவு செய்தார்கள். 

அதற்கு அன்றைய அமெரிக்க  ஜனாதிபதியான   உட்ரோ வில்சனை  வஞ்சகமாக நிர்ப்பந்தித்து அரசின் ஒப்புதலோடு  உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்காவில்  இருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கி. இந்த  தனியார் வங்கி அச்சடித்து வெளியிடுவது தான் டாலர் என்னும் உலகின் மிக சக்தி  வாய்ந்த காகிதப்பணம்!

அமெரிக்க அரசியலமைப்புச்  சட்டத்தின்  விதிமுறைகளுக்கு  முரணாக, அந்நாட்டின்  நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு  நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும்  தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த  வங்கியிடம் அளித்தது அமெரிக்க  நாடாளுமன்றம். முற்றிலும் சட்டவிரோதமாக  உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில்  அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற  சக்தி கொண்டதாக மாறியது. .

இன்று உலகவங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.  இணையத்தில் இதற்கான ஆதாரங்களை நீங்கள் காணலாம் (The Rothschild-Owned Central Banks of the World…  https://shar.es/1IU7u4 ) அந்த வகையில் நமது இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India, Bank Indonesia,  Central Bank of Nigeria, Central Bank of Norway, Central Bank of Oman, State Bank of Pakistan இவற்றை ஒரு சில உதாரணங்களாக கூறலாம். 

உலகளாவிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்

உலக வல்லரசு உருவாக்கும் இந்த மதிப்பற்ற காகிதப் பணத்தை மதிப்புள்ளதாகக் காட்டி உலக நாடுகளின் மீது திணித்து அந்நாட்டு வளங்களைக் கொள்ளை அடிக்க நடத்தப்படும் அரசியல்தான் உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது.

அவ்வாறு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத் ‘தயாரிப்பவர்கள்’ தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு  இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள், பெட்ரோலிய வளங்கள், நிலத்தடி வளங்கள்,  விளைபொருட்கள், இயற்கைவளங்கள், உலகக் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள், நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவற்றை விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள், உலகை அச்சுறுத்தும்  ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்துக் கம்பெனிகள், பத்திரிகைகள், டிவிக்கள், ஊடகங்கள்,  பொழுதுபோக்கு நிறுவனங்கள் என உலகில் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவற்றை அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள்.

ஆக இன்று உலகம் மேற்கூறப்பட்ட வங்கி உடைமைகள் உள்ளிட்ட ஒரு பதிமூன்று அல்லது பதினாறு யூத இனத்தைச் சார்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது.

பணம், ஆயுதம், அரசாங்கம், ஊடகம், பயங்கரவாதம்,  இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா? 

சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாடு ஏன் யாருக்கும் அடங்காமல் தன்னிச்சையாக தன் அராஜகங்களை நிறைவேற்றுகிறது என்ற கேள்விக்கு இங்கே பதில் இருப்பதை நீங்கள் காணலாம்.

அடங்காத பொருளாசையின் கொடிய விளைவுகள் 

ஆக, மேலே கூறப்பட்ட  யூத குடும்பங்களின்  வம்சாவளியினரின் கூட்டமைப்பின் கைகளால் தான் உலகத்தின் மொத்த பொருளாதாரமும்,  உலக நாடுகளின் வளங்களும், நிறுவனங்களும்  ஊடகங்களும் கட்டுப்படுத்தப் படுகின்றன.  இவர்கள் தங்கள் அடங்காத பொருளாசையை  நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத்  துணிகிறார்கள். உலக மக்களின் செல்வங்களையும் வளங்களையும் சம்பாத்தியங்களையும் கைவசப்படுத்துவதற்காக தங்கள் கைக்கூலிகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களிடையே வெறுப்பை விதைத்து போர்களை திணிக்கிறார்கள்.

தங்கள் ஆயுதங்களை விற்கிறார்கள். உலக  அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள்.  தங்கள் ஆதிக்கத்தையும் உலக  நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும்  இவர்களின் ஆணைப்படியே நியமிக்கப்  படுகிறார்கள். அமெரிக்காவை தங்கள் இராணுவக் கரமாக பயன்படுத்தி நாடுகளை அடக்கி வைக்கிறார்கள். நாடுகளுக்கு  இடையேயான வியாபாரங்கள் கட்டாயமாக  டாலரில்தான் நடத்தப்பட வேண்டும். இதற்கு  ஒப்புக்கொள்ள மறுக்கும் தலைவர்கள் போர்கள்  மூலமும் உள்நாட்டுக் கலவரங்கள் மூலமும்  அப்புறப்படுத்தப் படுகிறார்கள் அல்லது  கொல்லப்படுகிறார்கள். (உதாரணம் சத்தாம்  ஹுசைன்,  கத்தாஃபி போன்றோர்).

Share this Article

Add a Comment

Your email address will not be published.