Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம்- பாகம் -1 - Thiru Quran Malar

இயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம்- பாகம் -1

Share this Article

இயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம் – பாகம் 1 
(கீழ்காணும் சுட்டிகளை ‘க்ளிக்’ செய்து படிக்கவும்)  

= இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியானவர்கள் இயேசுநாதரும் அவரைத் தொடர்ந்து வந்த நபிகள் நாயகமுமே. (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)

= தனக்குப்பின் இவ்வுலகுக்கு தூதராக வர இருந்த முஹம்மது நபியவர்கள் பற்றி இயேசு தீர்க்கதரிசனம் செய்துள்ளதை பைபிளிலும் குர்ஆனிலும் காணமுடிகிறது.

= வாழ்நாள் நெடுகிலும் – அதாவது பிறப்பு முதல் அவரது விண்ணேற்றம் நடந்ததுவரை – இயேசுவின் மூலம் பற்பல அற்புதங்களை இறைவன் நிகழ்த்திக்காட்டியுள்ளான். இன்னும் பல அவரது இரண்டாம் வருகையின்போது நிகழவுள்ளன.

= இன்று இயேசுநாதர் பற்றிய சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனையும் சேர்த்தே அணுக வேண்டும். ஏன் என்பதை கீழ்கண்ட உண்மைகளை ஆராயும்போது  தெளிவாகிறது:

அ) திருக்குர்ஆன் இறங்கிய சூழலும் பாதுகாக்கப் படுவதும்

ஆ) முந்தைய வேதங்களோடு ஒப்பிடும்போது எவ்வாறு திருக்குர்ஆன் இன்னும் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது

இ) அது எல்லாவித முரண்பாடுகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது

ஈ) அற்புதகரமாக அது தாங்கி நிற்கும்.அறிவியல் உண்மைகள்

= அன்னை மரியாளின் மீதும் இயேசுவின் மீதும் சுமத்தப்பட்ட களங்கங்களில் இருந்து தூய்மைப்படுத்தி அவர்களை பெருவாரியான மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருக்குர்ஆனுக்கும் அதைக் கொண்டுவந்த நபிகளாருக்குமே சேரும்… 

= எல்லா இறைத்தூதர்களும் போதித்தது போன்றே இயேசு நாதரும் முஹம்மது நபிகளும் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதோடு இறைவன் அல்லாதவற்றை வணங்குவது – அதாவது அவனுக்கு இணைவைத்தலை – பெரும்பாவம் என்றும் கண்டித்தனர்.

= தனக்குப்பின் வரவிருக்கிற தேற்றவாளர் என்று ஏசுவால் சிறப்பித்துக் கூறப்பட்ட முஹம்மது நபியவர்களை இன்று நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? முந்தைய தூதர்களோடு ஒப்பிடும்போது அவருக்கு உள்ள வித்தியாசங்கள் இவை

அ). தேற்றவாளர் முஹம்மது நபிகள் அவருக்கு  முன்னர் வந்த இறைத்தூதர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ மக்களுக்கோ அனுப்பப்பட்டவர் அல்ல, மாறாக அனைத்துலகுக்காகவும் அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதராக இருக்கிறார்

ஆ) அவர் மூலம் அனுப்பப்பட்ட வேதம் குர்ஆனும் நபிமொழிகளும் இன்றளவும் சிதையாமல் பாதுகாக்கப்படுவது.

இ) உலகெங்கும் கால்வாசி மக்களுக்கு மேல் அவரை நேசிப்பவர்கள் இருந்தும் உலகில் எங்குமே அவரது சிலையோ உருவப்படமோ காணப்படாதது

ஈ) மனிதவாழ்வின் அனைத்து துறைகளுக்கும் பின்பற்றத்தக்கதாக அவரது வாழ்க்கை முன்மாதிரி காணக் கிடைப்பது.இவை அனைத்தும் அவரே இன்று மனிதகுலம் பின்பற்றத்தக்க தலைவர் என்பதை எடுத்துக்கூறுவதாக உள்ளது.

= ஆண்துணையின்றி அற்புதமான முறையில் இயேசுவைக் கர்ப்பம் தரித்து குழந்தையைப் பெற்றெடுத்ததும்  மக்களால் விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்டார்கள் அன்னை மரியாள்.

அப்போது  அற்புதமான முறையில் குழந்தை இயேசு மக்கள் முன் பேசியதையும் அதன் காரணமாக அன்னை மரியாள் கல்லெறி தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டதையும் திருக்குர்ஆன் துணை கொண்டு தெளிவான உண்மைகளை அறியலாம்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.