இனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்
இறைவேதம் #திருக்குர்ஆன் அனைத்து மனிதகுலமும் ஒரே ஒரு ஆன்மாவில் இருந்து தோன்றியதே என்பதை மிகத்தெளிவாக அறிவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது. அத்துடன் நில்லாமல் வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை ஏற்றோரிடையே அவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டுவதை உலகம் அறியும்.
= மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
உலகெங்கும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர் அன்றாடம் ஐவேளை தோளோடு தோள் சேர்ந்து நின்று நிறைவேற்றும் தொழுகைகளில் இதைக் காணலாம். இஸ்லாம் என்ற வாழ்வியலை ஏற்ற மக்களிடையே இனம் நிறம் மொழி நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து உருவாகும் உலகளாவிய சகோதரத்துவமும் இதற்கு சான்று.
சக மனிதன் சகோதரனே தனக்கு சமமே என்ற திருக்குர்ஆன் கூறும் மேற்கண்ட உண்மையை கடவுளின் பெயரால் பிற மக்களைச் சுரண்ட முற்பட்ட ஆதிக்க சக்திகள் மறுக்கவும் மறைக்கவும் செய்தார்கள். ஆத்திகமும் நாத்திகமும் இவர்கள் நிறைவேற்றிய கொடுமைகளுக்குத் துணை நின்றன.
மனிதகுல ஒற்றுமை மறுக்கப்படுதல்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நாமறிந்த தொன்மையான முழக்கம். அனைத்து மனித குலமும் ஆதம் என்ற முதல் மனிதர் மற்றும் அவரது துணைவி ஏவாள் (ஹவ்வா) இவர்களின் பின்தோன்றல்களே என்பது அனைத்து ஆப்ரஹாமிய (யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய) மதங்களும் கூறும் பொதுவான கருத்து.
ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின்னால் சில இடைத்தரகர்கள் தங்கள் மனம்போன போக்கில் இறைவேதங்களில் அடங்கியிருந்த உண்மைகளை மறைக்கவும் திரிக்கவும் செய்தார்கள். மனிதன் சக மனிதனுக்கு சமமே மற்றும் சகோதரனே என்ற கருத்தை வன்மையாக மறுத்தார்கள்.
சுயநல ஆதிக்க சக்திகளுக்கு துணை போனார்கள்.அதனால் உலகெங்கும் நலிந்த நாடுகளை தங்கள் ஆயுத பலத்தால் கீழடக்கி அந்நாட்டு வளங்களைக் கொள்ளையடித்த காலனி ஆதிக்க சக்திகளுக்கு குற்ற உணர்வே சற்றும் எழுந்ததில்லை.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் வசித்த பழங்குடியினரும் அப்பாவிகளும் சக மனிதர்களே – தங்களைப் போன்ற உணர்வுகள் கொண்டவர்களே- என்ற சகதாபம் அவர்களுக்கு சற்றும் எழவில்லை.
எனவே நிராயுதபாணிகளாக நின்ற அவர்களை இலட்சக்கணக்கில் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள். ஆப்பிரிக்காவின் அப்பாவிக் கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து தங்கள் காலனி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்றார்கள். இலாபம் ஈட்டினார்கள்.
நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்து வந்த மனித உரிமை மீறல்களுக்கும் கொடுமைகளுக்கும் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோ பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனைகள் உள்ளன என்ற அச்சமோ அவர்களுக்கு துளியும் இருக்கவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்ககூடும்?
இறைவேதங்களில் இனவெறி
காலனி ஆதிக்க கொடுமைகளுக்கு தலைமை வகித்தவர்கள் யூதர்கள். இந்தியாவை காலனிப்படுத்தி ஆண்டுகொண்டிருந்தது ஆங்கிலேயர்கள் அல்லது வெள்ளையர்கள் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ஒரு தனியார் வியாபாரக் குழுமம்தான் அப்போதைய ஆங்கிலேய அரசின் ஆதரவோடு அதை நிகழ்த்திக் கொண்டு இருந்தது.
நமக்குத் தெரிந்த கிழக்கிந்திய கம்பெனி (East India Company) ரோத்சைல்ட் (Rothchild) என்ற யூத குடும்பத்தின் உடமையாக இருந்தது. 1760 களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இயங்கி வந்த பன்னாட்டு வங்கிக் குழுமங்களின் சொந்தக்காரர்களாக விளங்கியது இந்த ரோத்சைல்ட் குடும்பம்.யூத இனம் என்பது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பது இவர்களின் வலுவான நம்பிக்கை.
இவர்களைப் பொறுத்தவரையில் யூத இனம் இறைவனுக்கு மிக நெருங்கிய – கண்ணியம் வாய்ந்த – இனம். வானவர்கள் யாருக்கும் கூட கிட்டாத உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். தங்கள் இனத்தைத் தவிர மற்றவை அனைத்தும் தாழ்ந்தவையே, அவை தங்களுக்கு அடிமைப்பட்டுத்தான் அல்லது தங்கள் தயவில்தான் வாழவேண்டும், யூதரல்லாத அனைத்து மக்களும் இவர்களுக்கு பணிந்து சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பன போன்ற கருத்து இவர்களால் புனிதமாகப் போற்றப்படும் வேதங்களில் திணிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
யூத வேதஞ்சார்ந்த சட்ட நூலான தல்முத் (Talmud) மிக மிகப் புனித சாசனமாகக் யூதர்களால் கருதப்படுகிறது. வேத நூலான பழைய ஏற்பாட்டை (Old Testament) விட மிக மேலாக மதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஹீப்ரு மொழியில் உள்ளது. யூதர்கள் யூதரல்லாதவர்களோடு எவ்வளவு கடுமையான போக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதை இவர்களின் புனித சாசனம் கற்றுக்கொடுக்கிறது.
உதாரணமாக சிலவற்றை கீழே காணலாம். யூதரல்லாத மக்களை அதாவது புறஜாதியினரை (gentiles) ‘கோயிம்’ என்ற இழிசொல் கொண்டே இவர்கள் குறிப்பிடுகிறார்கள்:“
All children of the ‘goyim’ (Gentiles) are animals.” (Yebamoth 98a)
= புற ஜாதியினரின் மக்கள் அனைவரும் விலங்குகளே (Yebamoth 98a)
= ஒரு புறஇனத்தான் யூதனைத் தாக்கினால் அவனுக்கு மரணமே தண்டனை. ஒரு யூதனை தாக்குவது என்பது கடவுளின் பார்வையில் கடவுளை தாக்குவது போன்றதாகும். (Sanhedrin 58b).
= புறஇனத்தினர் அனுபவிக்கும் அனைத்து அருட்கொடைகளுக்கும் இஸ்ரேலுக்கு இறைவன் வழங்கிய தனி சிறப்பே காரணமாகும். (Yebamoth 63a).
= ஒரு யூதன் புறஇனத்தான் செய்யும் வேலைக்குக் கூலி கொடுக்க வேண்டியதில்லை. (Sanhedrin 57a)
= புறஇனத்தான் ஒருநாள் முழுக்க ஓய்வெடுத்தால் அவன் கொல்லப்படவேண்டும். (Sandendrin 58b).
= புற இனத்தானை உபசரிப்பது கடவுளை அதிருப்திப் படுத்தும் செயலாகும் (Sanhendrin 104a).
= புறஇனத்தானுக்கு சட்டம் கற்பிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். (Hagigah 13a).
= சட்டம் கற்கும் புறஇனத்தான் கொல்லப்பட வேண்டியவன். (BT Sanhedrin 59a).
சமத்துவத்துக்கு தடை நின்ற நாத்திகம்
ஒருபுறம் கடவுளின் பெயரால் சிலர் இனவெறி விதைத்துக்கொண்டிருக்க மறுபுறம் நாத்திகமும் தன் அறியாமைக் கொள்கைகளின் காரணமாக மனித சமத்துவத்தை மறுத்தது. பரிணாமவியல் என்ற அறியாமைக் கோட்பாட்டை போதித்து ஒரே ஒரு மனித ஆண்-பெண் ஜோடியில் இருந்துதான் மனித குலம் உருவாயிற்று என்ற உண்மையை மறுத்து குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற ஆதாரமற்ற ஊகத்தைப் பரப்பியது.
அதனால் ஒவ்வொரு இனத்துக்கும் மூதாதையர் குரங்குகள் வேறுவேறு என்ற காரணம் காட்டி மனிதனின் தோற்றம், நிறம், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வழக்கமும் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்களை காவுகொண்டது.
உதாரணமாக ஹிட்லர் தன் நாஜி இனமே உலகில் மற்றெல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று கூறி மற்ற நாடுகளை அடிமைபடுத்தவும் மக்களைக் கொன்று குவிக்கவும் செய்தார். கருப்பர்கள் (நீக்ரோக்கள்) ஒருபோதும் வெள்ளை இனத்தாருக்கு சமமாக முடியாது என்று சொல்லி அவர்களை தாழ்த்தி வைக்கவும் செய்தார்.
கொஞ்சநஞ்சம் மக்களிடம் இருந்து வந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வை அறவே துடைத்தெறிந்தது நாத்திகம். யாருக்கு எந்தக் கொடுமைகள் செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வை ஆதிக்க சக்திகளுக்குள் அது புகுத்தியது.
ஆயுத ஆதிக்கம் வாய்த்த வெள்ளையர்கள் அவர்கள் பிடித்தெடுத்த கண்டங்களில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதற்கும் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த கறுப்பின மக்களை ஆயுத முனையில் கீழடக்கி அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச்சென்று அடிமை வாணிபம் செய்ததற்கும் நாத்திகக் கொள்கை உருவாக்கிய மனோநிலை பெரிதும் துணைபோயிருக்கிறது என்பதே உண்மை.
இறைவனின் எச்சரிக்கை
இறைவனின் பெயரால் இனவெறி கடைபிடித்த ஆத்திகர்களாயினும் சரி இறைமறுப்பை கைகொண்டு இனவெறி பாராட்டிய நாத்திகர்களாயினும் சரி அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி இறுதித் தீர்ப்பு நாளன்று இறைவன் முன்னால் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்பது மட்டும் உறுதி.
இறைவன் கற்பித்த மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மறுத்து சக மனிதனின் உரிமைகளை சூறையாடிய ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் கடுமையான தண்டனைகள் இறைவனிடம் காத்திருக்கின்றன.
= வரவிருக்கும் அந்நாளில் (ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் தண்டனைகளிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்! அன்று இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான) கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.(திருக்குர்ஆன் 2:281)
= “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).
= “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)