அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள்
கொசு… நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி! விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுகிறோம். சாம்பிராணி, புகைபோடுதல், கொசுவத்திச்சுருள், கொசு விரட்டி மாட், கொசுவடிக்க பாட், கொசுவலை என இதன் தொல்லைகளை தவிர்க்கும் முயற்சியில் அன்றாடம் நம் அறிவியலும் தொழில் நுட்பமும் வர்த்தகமும் வளர்ச்சி கண்டு வருகின்றன.
மட்டுமல்ல, இந்த கொசுத்தொல்லை காரணமாக நமது ஆரோக்கியம் மற்றும் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வும் நடவடிக்கைகளும் எல்லாமே வளர்ச்சி கண்டு வருகின்றன என்பதும் உண்மை.
உங்கள் கைகளுக்கிடையில் எளிதாக நீங்கள் அடித்துக் கொல்லும் இந்த அற்ப ஜீவி எவ்வளவு அரிய அற்புதங்களை, அபாரமான தொழில் நுட்பங்களைத் தாங்கி நிற்கும் படைப்பினம் என்பதை எப்போதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?
உங்களைப் படைத்தவனின் படைப்பாற்றலை உங்களுக்கு உணர்த்தத்தான் உங்களை நோக்கி அது வந்தது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?
அற்பஜீவிக்குள் அற்புதங்கள்:–
அதன் தும்பிக்கையில் ஒன்றல்ல… ஆறு ஊசிகள்!
– அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்..
– அவற்றில் ஒன்றின் வழியாகத்தான் இரத்தம் உறிஞ்சப்படுகிறது…
இரத்தத்தின் பிசுபிசுப்பு (viscosity) நாம் அறிந்ததே. அது எவ்வாறு அந்த ஊசியில் அமைந்துள்ள நுண் குழாயின் மூலம் உறிஞ்சப்படுகிறது?
– இதை சிந்தித்தாலே ஆச்சரியத்தின் விளிம்புக்கு சென்று விடுகிறோம்.
இவைமட்டுமா அந்த அற்பஜீவிக்குள் அமைந்துள்ள அற்புதங்கள்? மேலே படியுங்கள்…
– அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
– அதன் வாயில் 48 பற்கள்.
– அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
– ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
– எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது.
அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்வது!.
– மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
– மனித இரத்தம் குடித்த கொசு நமது கைகளில் அடிபடாமல் தப்பிப் பறக்கும் மர்மம்:
கொசு மனிதனின் இரத்தம் குடித்தபின் அதன் எடை இரண்டு அல்லது மூலம் மடங்கு அதிகமாகிவிடும்.இந்த அதிக எடையை தூக்கிகொண்டு பறப்பதற்கு பிற பூச்சி,மற்றும் ஈக்கள் தங்களின் கால்களால் உந்தித்தள்ளிய பிறகே சிறகை அடிக்க ஆரம்பிக்கும்.
ஆனால் கொசு, தன் நீண்ட கால்களால் தோல் பரப்பை அழுத்தாமல் தங்களின் சிறகுகளை அதி வேகத்தில் அடித்து ஹெலிகாப்டர் போன்று அலக்காக எழும்புகின்றன. ஆம், அது அதி நவீன தொழில் நுட்பம்… யாருக்கு? நமக்கு! ஆனால் கொசுவைப் பொறுத்தவை ஆதிகால தொழில் நுட்பம்!
பிளாஸ்மோடியம்” (Plasmodium)
– இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு செல் உயிரியாகிய “பிளாஸ்மோடியம்” (Plasmodium.) என்ற ஒட்டுண்ணி உள்ளது.
மனிதர்களுக்கு நோயை பரப்புவது அற்பமான கொசுவும் அதைவிட அற்பமாக கொசுவிலேயே இருக்கும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி என்ற உயிரியுமே!
அது இறைவனின் திருமறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது.
= நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதற்கு மீதுள்ளதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக் கூறுவார்கள். “(#திருக்குர்ஆன் 2:26)
இந்த வசனத்தில் கூறப்பட்ட “ஃ பவ்கஹா” (மேலுள்ளது) என்ற பதம் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. கொசுவை விட அற்பமானது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு செல் உயிரியாகிய “பிளாஸ்மோடியம்” எனும் ஒட்டுண்ணி(parasite). மலேரியா, டெங்கு போன்ற கொடிய நோய்கள் கொசுவின் மூலமாகப் பரவுவதை நாம் அறிவோம்.
அற்பமான கொசுவுக்குள் அடங்கியுள்ள நுட்பங்களை எலேக்ட்ரோன் மைக்ரோஸ்கோப் போன்ற அதிநவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் நாம் அறிய வருகிறோம். அதேபோல காலம் செல்லசெல்லத்தான் இந்த ஒட்டுண்ணிகளின் படைப்பு ரகசியங்களை நாம் அறியவருவோம்.
நமது குறுகிய அறிவுக்கு இன்னும் அவை எட்டவில்லை என்பதற்காக அந்த படைப்பினங்களை உதாரணமாகக் கூற #இறைவன் வெட்கப்பட வேண்டுமா என்கிறான். நீங்கள் அந்தப் படைப்பு இரகசியங்கள் இன்னும் அறியாமல் இருப்பது எனக்கு ஒரு பொருட்டல்ல என்பதைப்போல் உள்ளது இந்த வசனம்.
இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?
இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக #இறைவன் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.
அப்போது தான் #இறைவன் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான்.
அதாவது ஈயானாலும் சிலந்தியானாலும் கொசுவானாலும் உங்களுக்கு அற்பமானவையாக இருக்கலாம். அவை தாங்கி நிற்கும் அற்புதங்களும் தொழில்நுட்பங்களும் அற்பமானவை அல்ல.
மனிதகுலம் அனைத்தும் சேர்ந்து நூற்றாண்டுகள் செலவிட்டாலும் அவைபோன்ற அற்புதங்களை உங்களால் உண்டாக்க முடியாது. அவை தாங்கிநிற்கும் தொழில் நுட்பங்களின் அருகில் கூட நீங்கள் நெருங்கமுடியாது. உங்கள் இளக்காரம் அறியாமையின் அப்பட்டமான வெளிப்பாடு அல்லாமல் வேறு என்ன என்பதைப் போல் அமைந்துள்ளது என்கிறது இந்த சவுக்கடி வசனம்!