Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்! - Thiru Quran Malar

பொறுமை – தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்!

Share this Article

பொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் #நபிகள் #நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலாம். இன்றும் உலக மக்கள்தொகையில் கால்வாசி அவரைக் கண்ணில் காணாமலேயே உயிருக்குயிராக நேசித்து வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்வதுதான் – அதாவது #இஸ்லாம்தான்- #இம்மைக்கு அமைதியையும் #மறுமையில் மோட்சத்தையும் பெற்றுத்தரும் என்பதை உறுதியாக அறிந்த நபிகளார் மக்களை எப்பாடுபட்டேனும் காக்கவேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டார்கள்.

அவர் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து அல்லும் பகலும் சத்தியப் பிரச்சாரத்திற்காகப் பாடுபடலானார்கள். மக்களின் புறக்கணிப்பு அவரைக் கவலையில் ஆழ்த்தியது. ஆனால் மக்கள் புறக்கணித்த போதும் பரிகாசம் செய்தபோதும் துன்புறுத்தியபோதும் தன் சத்தியப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. அவரது ஆர்வத்தைப் பற்றி #இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

 = (நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே! (திருக்குர்ஆன் 18:6) 

நபிகளாரின் தொலைநோக்கு

பூமியில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதியோடு பாடுபடுபவர்களுக்கு நபிகளாரின் வாழ்வில் அழகிய முன்மாதிரி உள்ளது.

 “எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.”(திருக்குர்ஆன் 7:199)  

எனும் இறைக் கட்டளைக் கேற்ப #நபிகளார் பொறுமையையும் மன்னித்தலையுமே தன் ஆயுதங்களாக எடுத்துக் கொண்டார்கள்.  அவரது இலக்கு மக்களைக் காத்து அவர்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதாக இருந்தது.

அதற்கான முயற்சியின்போது அந்த மக்கள் எப்படிப்பட்ட கடுமையான தாக்குதல்கள்  நிகழ்த்தினாலும் அவர் தம் குறிக்கோளில் இருந்து பின்மாறவில்லை.  உதாரணமாக கீழ்கண்ட சம்பவத்தைப் பாருங்கள்:

= மக்காவிற்கு அருகே இரு மலைகளுக்கு இடையே அமைந்திருந்த தாயிப் நகரில் தனது சத்தியப் பிரச்சாரத்திற்காக சென்ற போது மிக மிகக் கடுமையாக கல்லால் அடித்துத் துரத்தப் பட்டார்கள் #நபிகளார்.

இரத்தம் தோய்ந்த உடலோடு கண்ணீர் மல்க இறைவனிடம் பிரார்த்தித்தார் #நபிகளார். உடனே தனது வானவர்களை அனுப்பிவைத்தான் #இறைவன். 

“ஆணையிடுங்கள் நபியே, உங்களை வேதனைக்குள்ளக்கிய இவ்வூர் மக்களை இம்மலைகளுக்கிடையில் நசுக்கிவிட நாங்கள் தயார்!” என்றார்கள் வானவர்கள். ஆனால் கருணை வடிவான நபிகளார் என்ன சொன்னார்கள் தெரியுமா?

“இன்று இவர்கள் ஏற்காவிட்டாலும் இவர்களின் தலைமுறைகளில் இருந்து நாளை நல்லோர் உருவாவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறி அவர்களைத் தடுத்தார்கள்.இதை வெறும் பொறுமை என்றால் போதாது. அதி தீவிரமான மனித நேயம் என்றல்லாவா சொல்ல வேண்டும்!

மக்களை அழிப்பதல்ல திருத்தி எடுப்பதே நோக்கம் 

#நபிகளார் நமக்குக் கற்பிக்கும் பாடம் என்னவென்றால்,  இங்கு தாக்குபவர்கள் நமக்கு எதிரிகளே அல்ல. அவர்களைப் பீடித்துள்ள ஷைத்தான்தான் நமக்கு எதிரி. #பொறுமை மூலமும் விவேகத்தைக் கைக்கொள்வது மூலமும்தான்  இம்மக்களைத் திருத்தியெடுத்து நேர்வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார்கள் அண்ணல் நபிகளார். 

தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா? இதோ உடம்பு முழுக்க இரும்புக் கம்பியால் சூடிடபட்ட வடுக்களைத் தாங்கிய நபித்தோழர் கபாப்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் கூறுகிறார்கள்:  

= “#இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (இறைவனிடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?  என்று கேட்டோம். 

அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏக இறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும்.

ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிரழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!

இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள்தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி) நூல்: புகாரி)

ஆம், தர்மத்தை பூமியில் நிலைநாட்ட உறுதியான #கொள்கைப் பிடிப்பும் அளவுகடந்த #பொறுமையும் தேவை என்பதையே எடுத்துரைக்கிறார்கள்

Share this Article

Add a Comment

Your email address will not be published.