Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
கிருஸ்தவர்களுக்கு நபிகளாரின் அன்பு மடல் - Thiru Quran Malar

கிருஸ்தவர்களுக்கு நபிகளாரின் அன்பு மடல்

Share this Article

நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இந்த கடிதத்தின் சுருக்கம்:
முஹம்மது நபி(ஸல்) தன்னுடைய ஆளுமையின் கீழ் உள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்தினார்கள் என்பதற்கும் இது  ஒரு சான்று.பல ஆதாரப்பூர்வமான வரலாற்று பதிவுகள், St.Catherine (Egypt)  நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் சில பதிவுகள், இஸ்லாமிய நீதிபதிகளால் வரலாற்று நம்பகத்தன்மை வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

துருக்கிய இஸ்லாமிய படைகள், எகிப்தை வெற்றிக்கொண்டபோது, அங்கே உள்ள மடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, இஸ்தான்புல் அரண்மனையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதனுடைய மூல பிரதி, இன்றும் இஸ்தான்புல்  அருங்காட்சியத்தில் உள்ளது.

கடிதத்தின் சுருக்கம்:அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதிடமிருந்து, அருகில், மேலும்   தொலைவில் உள்ள கிருத்துவர்களுக்கு இந்த உடன்படிக்கையின்  மூலம் சொல்வது  என்னவென்றால், நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்.

நிச்சயமாகநான்இறை அடியார்கள்என் உதவியாளர்கள் மற்றும் என்னை பின்பற்றுபவர்கள்கிருத்துவர்களை பாதுகாப்போம்ஏனென்றால் அவர்கள் என் குடிமக்கள்மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் விரும்பாததை விட்டும் நான் தடுத்துக்கொள்வேன் .

அவர்களின் மீது எந்த கட்டாயமும் இல்லை. அவர்களின் நீதிபதிகள், பொறுப்பிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் . துறவிகள் மடத்திலிருந்து நீக்கப்படமாட்டார்கள். கிறிஸ்துவர்களின் ஆலயங்களை இடிப்பதற்கோ, சேதப்படுத்துவதற்கோ யாருக்கும் அனுமதி இல்லை. ஆலயங்களில் இருந்து எதையும் முஸ்லிம்கள் எடுத்துச் செல்லக் கூடாது,  யாராவது மீறி செய்தால், அல்லாஹ்வின் கட்டளைக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்தவராவார். உண்மையிலேயே, கிருத்துவர்கள் என்னுடைய நண்பர்கள், மேலும் அவர்கள்  வெறுப்பதிலிருந்து விலகிக்கொள்ள என்னுடைய  அனுமதிப் பட்டயத்தை பெற்றுள்ளனர்.

அவர்களை யாரும் நாட்டைத் துறந்து  செல்லுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. தங்களை பாதுகாத்துக்கொள்ள, முஸ்லிம்கள்தான் போரிட வேண்டுமே தவிர, கிறிஸ்துவர்களை தங்களோடு சேர்ந்து  போரிடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. கிறிஸ்துவப் பெண்ணின்  சம்மதம் இல்லாமல் ஒரு முஸ்லிம் அவளை திருமணம் செய்யக்கூடாது, அவள் தன்னுடைய ஆலயத்திற்கு சென்று வழிபடுவதை தடுக்கக்கூடாது.

அவர்களுடைய ஆலயங்கள் கண்ணியப்ப்படுத்தப்படவேண்டும். அவைகள்  பழுது பார்க்கப்படுவதை  விட்டும் தடுக்கக்கூடாது. இறுதி நாள் வரை உள்ள முஸ்லிம்கள் இந்த உடன்படிக்கையை மீறக்கூடாது.

முழு விபரத்தையும் இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.http://newsrescue.com/letter-to-all-christians-from-prophet-muhammad-sa/#axzz3eOJkMtJF

நன்றி: நாடோடி தமிழன்

Share this Article

Add a Comment

Your email address will not be published.