Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைவனையே வணங்கச் சொன்ன இயேசுநாதரும் நபிகளாரும் - Thiru Quran Malar

இறைவனையே வணங்கச் சொன்ன இயேசுநாதரும் நபிகளாரும்

Share this Article

இங்கு இயேசு நாதரை கண்ணியமான முறையில் உலகுக்கு அறிமுகப்படுத்தி இயேசுவின் மீது சுமத்தப்பட்ட களங்கங்களை துடைத்தெறிந்த முஹம்மது நபி அவர்களைப் பற்றிய சில உண்மைகளையும் நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். (அவர்கள் இருவர் மீதும் இறைசாந்தி உண்டாவதாக!)

= இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக அனுப்பப்பட்டவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.  இயேசு(அலை) அவர்கள் இறைவனால் வானிற்க்கு உயர்த்தப்பட்ட பின் சுமார் 560 வருடங்களுக்குப்பின் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்.

= நம் ஆதிபிதா ஆதம் நபி(அலை) முதல் இயேசு (அலை) வரை எந்த ஓரிறைக் கொள்கையை வாழையடி வாழையாக போதித்தனரோ அதே கொள்கையை சற்றும் மாறுபடாமல். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள்.

= இயேசு(அலை) எக்கொள்கையை போதித்தாரோ அதையே முஹம்மது நபி(ஸல்) போதித்தார்கள். முஹம்மது நபி(ஸல் ) எக்கொள்கையை போதித்தாரோ அதையே இயேசு(அலை) போதித்தார்கள் எனபதை இங்கு தெளிவாக விளங்கிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
இறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் திருக்குர்ஆன் கூறுவதை அறிவீர்கள்:

நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.”  (திருக்குர்ஆன் 112: 1-4)

அதேபோல் இறைவன் அல்லாதவற்றை வணங்குவதை –அதாவது இறைவனுக்கு இணைவைத்தலை – திருக்குர்ஆனும் நபிமொழிகளும் பெரும்பாவம் என்று கண்டிப்பதையும் நீங்கள் அறிவீர்கள்:

‘ …..நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தல் மாபெரும் பாவமாகும்……        (திருக்குர்ஆன் 31:13)

 ‘நிச்சயமாக இறைவன் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான் இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.’  (திருக்குர்ஆன் 4:48)

பைபிளில் இறை ஏகத்துவம்

ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் பழைய ஏற்பாடு: –

= கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள்.       (பழைய ஏற்பாடு – எரேமியா 10:10)

=“இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (உபாகமம் 6:4)

= “நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்” (ஏசாயா 44:6)

ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் புதிய ஏற்பாடு: –

“அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” (மத்தேயு 19:16-17)

“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3)

= “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)

இறைவனுக்கு இணைவைத்தலை கண்டிக்கும் பைபிள்::

எகிப்து தேசம்! அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்தில் இருந்து உங்களை பிறப்படப் பண்ணிய கர்த்தராகிய நானே தேவன். என்னையல்லாது வேறு ரட்சகனில்லை. மேலே வானத்திலேயும், கீழே பூமியிலேயும், பூமியின் கீழ் தண்ணீரிலேயும் கர்த்தருக்கு இணையாக யாதொரு சொரூபத்தையும், யாதொரு விக்ரகத்தையும் நீர் எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்த்தர் அதை வெறுக்கிறார் என்று கூறுகிறது. (யாஸ்ராகாமத்திலே 1-5)

= “ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;  அவருக்கே கனமும்  நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (தீமோத்தேயு 6:16) 

         ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச் சொல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகும். ஏசுவின் பெயரைச் சொல்லி இல்லாத காரியம் பண்ணுகிறவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். இதோ,

·            அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே  தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே  அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா…? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லை… அக்கிரமச் செய்கையாரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்.(மத்தேயு 7:21)

இவை எல்லாம் எதை நமக்கு எடுத்துரைக்கின்றன?….தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும், அவனை விடுத்து மற்றவற்றை வணங்குவது மாபெரும் பாவம் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார்கள் என்பதைத்தானே?

 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ”நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ  (இறை வெளிப்பாடு) அறிவிக்காமலில்லை.  (திருக்குர்ஆன் 21:25)

= கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும்  இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதும் தெளிவு.

Share this Article

Add a Comment

Your email address will not be published.